மின் கம்பம் உடைந்து, மின் வாரிய ஊழியர் பல ி:

சிவகாசி அருகே சோகம். மின் இணைப்பு பணியின் போது, மின் கம்பம் உடைந்து விழுந்து மின்வாரிய ஊழியர் பரிதாப பலி:

சிவகாசி :

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதிகளில், பழைய மின் கம்பங்களை மாற்றி, புதிய மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இன்று, கண்ணகி காலனி பகுதியில் புதிய மின் கம்பங்களில், மின்சார வயர்களை இணைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இதில் ,சிவகாசி மின்வாரிய ஊழியர்கள் காளிராஜ் (30), முருகேசன் (29) இருவரும் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக, புதிய மின் கம்பத்தின் அடி பாகம் திடீரென்று ஒடிந்து விழுந்தது. இதில் மின் கம்பத்தின் கீழ் நின்றிருந்த காளிராஜன் தலையில் மின் கம்பம் விழுந்ததால், அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு ஊழியர் முருகேசன் படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் முருகேசனை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இது குறித்து, தகவலறிந்த திருத்தங்கல் காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று, காளிராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: