மதுரை நகர குற்ற செய்திகள்: போலீஸார் விசார ணை:

தெற்கு வாசல் பகுதியில்
வாளுடன் சுற்றித் திரிந்த வாலிபர் கைது:

மதுரை:

மதுரை
தெற்கு வாசல் பகுதியில், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவர், சப்பானி கோவில் தெரு எப்.எப். ரோடு பகுதியில் சென்ற போது, வாலிபர் ஒருவர் வாள் ஒன்றை பிடித்தபடி பொதுமக்களை ஆபாசமாகபேசி மிரட்டிக்
கொண்டிருந்தார். அவர், போலீசை கண்டதும் தொடங்கினார். அவரை விரட்டி போலீசார் பிடித்தனர்.
அவர் வைத்திருந்த வாளைபறிமுதல் செய்து, அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், மீனாட்சி தியேட்டர் எதிரே பள்ளம் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் சூர்யா என்ற பள்ளம் சூர்யா 26. என்று தெரிய வந்தது .
அவரை போலீசார் கைது செய்தனர்.

எஸ். எஸ். காலனியில்
கடன் தொல்லையால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை:

மதுரை எஸ் .எஸ். காலனி, காளிமுத்து நகரை சேர்ந்தவர் சிவனாண்டி மகன் ஆனந்த் 30. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது.
பல்வேறு இடங்களில், கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், மனமுடைந்த ஆனந்த் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து, எஸ் .எஸ். காலனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடல்புதூரில்
தனியாக சென்றபெண்ணிடம்
10 பவுன் செயின் பறிப்பு:

மதுரை, கூடல் புதூரில் தனியாகச் சென்ற பெண்ணிடம் 10 பவுன் தங்க சங்கிலி பறித்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர் .
புது விளாங்குடி குறிஞ்சிநகர் விரிவாக்க பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் மனைவி அனுராதா 48.
இவர் அந்த பகுதியில் இருந்த காலி இடம்வழியாக நடந்து சென்றார். அப்போது, அவரிடம் மர்ம ஆசாமி அவர் அணிந்திருந்த 10 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிவிட்டார் .
இந்த சம்பவம் குறித்து ,அனுராதா கூடல்புதூர் போலீஸில் புகார் செய்தார் .
போலீஸார் வழக்குப் பதிவு செய்து, செயின் பறித்த ஆசாமியை தேடி வருகின்றனர்.

செல்லூரில்
முதியவரிடம் கத்தியை காட்டி வழிப்பறி:
சென்னை வாலிபர் கைது:

மதுரை செல்லூர் பகுதியில் நடந்து சென்ற முதியவரிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்த சென்னை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
செல்லூர் ஆர்.எஸ். நாயுடு தெருவை சேர்ந்தவர் சோலை 62 .இவர் ,விளாங்குடி ரோடு சந்திப்பு பகுதியில் நடந்து சென்றார்.
அப்போது, வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூபாய் முன்னூரை பறித்துச் சென்று விட்டார்.
இந்த சம்பவம் குறித்து, சோலை செல்லூர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சென்னை தி. நகர் கண்ணம்மா பேட்டையைச் சேர்ந்த தேவதாஸ் மகன் கார்த்திக் என்ற மாரியப்பன் 26 என்ற வாலிபரை கைது செய்தனர்.

டாஸ்மார்க்பாரில் மது குடித்த போது தகராறு:
வாலிபருக்கு பீர் பாட்டில் அடி:
மற்றொரு வாலிபர் கைது:

மதுரை
டாஸ்மாக் பாரில் மது குடித்த போது நடந்த தகராறில் வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய மற்றொரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கண்ணணேந்தல் ஜி. ஆர். நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் மதிவாணன் மகன் பாப்பையா 27. இவர் இவருடைய நண்பர்களான குமரன், விக்கி என்ற விக்னேஸ்வரன் ஆகியோருடன் புதூர் காந்திபுரம் ஜவஹர்புரத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தினார்.
அப்போது, அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த குமரனும் விக்னேஸ்வரனும் பீர் பாட்டிலால் பாப்பையாவை தாக்கினர்.
இந்த சம்பவம் குறித்து, அவர் கே.புதூர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விக்னேஸ்வரன் 28. ஐ கைது செய்தனர். குமாரனை தேடி வருகின்றனர்.

மேல பெருமாள் மேஸ்திரி வீதியில், சாப்பாடு வாங்கி கொடுக்க மறுத்தவர்மீது தாக்குதல்:
2 வாலிபர்கள் கைது :

மதுரை மேல பெருமாள் மேஸ்திரி வீதியில் சாப்பாடு வாங்கி கொடுக்க மறுத்தவர் மீது தாக்குதல் நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சண்முக புரத்தை சேர்ந்தவர் போத்திராஜ் 42.
இவர் ,மதுரை மேல பெருமாள் மேஸ்திரி வீதியில் சென்ற போது அவரை இரண்டு பேர் வழிமறித்து, அவரிடம் சாப்பாடு வாங்கித் தரும்படி வற்புறுத்தியுள்ளனர். அவர் அதற்கு மறுக்கவே, தாங்கள் வைத்திருந்த வாளால் அவரை மிரட்டி கைகளால் போத்திராஜை சரமாரியாக தாக்கினர்.
இந்த சம்பவம் குறித்து ,போத்திராஜ் திடீர்நகர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மேலமாசி வீதி கோபால கொத்தன் தெருவை சேர்ந்த மோகன் மகன் ஆதித்யன் என்ற ஆதி 23.
மற்றும் செல்லூர் மணவாள நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணி மகன் வெங்கட்பிரபு 21 .ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து வாள் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

கீரை துறையில்
பணம் கேட்டு மூதாட்டி மீதுதாக்குதல் வாலிபர் கைது:

மதுரை கீரைத்துறை மேல தோப்பு வைச் சேர்ந்தவர் மங்கலம் 70. கீரைத்துறை மூக்க நாடார் சந்துவை சேர்ந்தவர் முத்துராம
லிங்கம் மகன் அய்யனார் 33. இவர் மூதாட்டி மங்களம் வீட்டிற்குச் சென்று பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்துவிட்டார் .
இதனால், ஆத்திரமடைந்த அய்யனார், மூதாட்டியை அவதூறாக பேசி மரக்கட்டையால் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து, மங்கலம் கீரைத்துறை போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து ,அவரை தாக்கிய வாலிபர் அய்யனாரை கைது செய்தனர்.

திருமங்கலம் டாஸ்மார்க் பாரில் சப்ளையர் தூக்கு போட்டு தற்கொலை:

மதுரை மாவட்டம், திருமங்கலம் டாஸ்மார்க் பாரில் சப்ளையர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை பசுமலை மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் கருப்பசாமி 35. இவர், திருமங்கலத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்தார். இரண்டு தினங்களுக்கு முன்பு மது குடிக்க வந்தவர்களுடன் வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதை அவருடைய மாமனார் கண்டித்துள்ளார். இதனால், மனமுடைந்த கருப்பையா சம்பவத்தன்று டாஸ்மார்க் பாரில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து மனைவி உமா கொடுத்த புகாரில், திருமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை அருகே
ஒரு வயது பெண் குழந்தையை கிணற்றில் வீசி, தாயும் குதித்து தற்கொலை
கணவரை பாதித்தநோய் தனக்கும் தொற்றியதால் மனமுடைந்து விபரீதம் :

மதுரை

மதுரை அருகே ஒரு வயது பெண் குழந்தையை கிணற்றில் வீசி தாயும் குதித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை அருகே கள்ளிகுடி டி. புது பட்டியை சேர்ந்தவர் மகேந்திரன் மனைவி மாரீஸ்வரி 26. இவருக்கு கனகாசிரி என்ற ஒரு வயது பெண் குழந்தை இருந்தது .மார்ஸ்வரியின் கணவர் திருப்பூரில் வேலை பார்த்தார் .பின்னர் விபத்தில் சிக்கிய நிலையில் அவருக்கு திருநெல்வேலி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கணவருக்கு மிகப்பெரிய நோய்த்தொற்று ஒன்று இருந்தது தெரியவந்தது. அந்த நோய் மனைவியையும் பின்னர் தொற்றிவிட்டது. இதனால், மனமுடைந்த மாரீஸ்வரி தனது ஒரு வயது கனகா சரி என்ற பெண் குழந்தையுடன் வெளியே சென்றவர் அதே ஊரில் உள்ள கிணற்றில் வீசிவிட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து, கூடக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: