மதுரையில் பலத்த மழை:

மதுரையில் பலத்த மழை கால்வாய் உடைப்பு:

மதுரை:

மதுரை மாவட்டத்தில், பல பகுதிகளில் அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது.
மதுரை நகரில், கோரிப்பாளயம், சிம்மக்கல், பழங்காநத்தம், திருநகர், ஒத்தக்கடை, மேலூர், சமயநல்லூர், சோழவந்தான், கருப்பாயூரணி, வரிச்சூர், வண்டியூர், திருப்பாலை உள்ளிட்ட பகுதிகளில், மழையானது விட்டு, விட்டு பெய்து வருகிறது.
தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், மதுரையில் சில இடங்களில் கால்வாய் நீர் பெருக்கெடுத்து சாலையில் வெள்ளம் போல ஓடுகிறது.
மதுரை- உத்தங்குடி சாலையில், வளர்நகரில், கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, நீரானது சாலையில் பெருக்கெடுத்து ஒடுவதால், நான்கு வழிச்சாலையில், வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
பலத்த மழையையொட்டி, மதுரை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட நிர்வாகமானது விடுமுறை அறிவித்துள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: