உயிரிழந்த அரிய வகை ஆந்தை:

மேலூரில், வனத்துறையினரின் அலட்சியத்தால் உயிரிழந்த அரியவகை ஆந்தை:

மதுரை:

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் இறை தேடுவதற்காக அரியவகை பறவை ஒன்று மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு உள்ள மரத்தின் அடியில் காயங்களுடன் கிடந்தது.

இதனைகண்ட அருகில் இருந்தவர்கள், இதுகுறித்து மேலூர் தீயணைப்புத்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்து பறவையை மீட்டு தீயணைப்பு நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும் மீட்கப்பட்ட அந்த பறவை ஆஸ்திரேலியா ஆந்தை என தெரிவந்த நிலையில் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இந்நிலையில், பலமணி நேரமாகியும் வனத்துறையினர் வராததால் அந்த அறியவகை ஆந்தை உடலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக பரிதாபமாக உயிரிழந்தது.

வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தும், அவர்களின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவே அரியவகை ஆந்தை உயிரிழப்புக்கு காரணம் என பறவை ஆர்வாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: