மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர்:

அனைத்து நாடுகள் மாற்றுத்
திறனாளிகள்
தின விழாவினை முன்னிட்டு, 40 பயனாளிகளுக்கு ரூபாய் 19.13 இலட்சம் மதிப்பீட்டிலான உபகரணங்களை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்,
பி.மூர்த்தி வழங்கினார்:

மதுரை:

மதுரை மாவட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அனைத்து நாடுகள் மாற்றுத்
திறனாளிகள் தின விழாவினை முன்னிட்டு, 40 பயனாளிகளுக்கு ரூபாய் 19.13 இலட்சம் மதிப்பீட்டிலான உபகரணங்களை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
பி.மூர்த்தி, வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்,
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தெரிவிக்கையில்:-
தமிழ்நாடு முதலமைச்சர், அனைத்து துறைகளிலும் ஏதாவது ஒரு வகையில் மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பணிகளை செய்து கொண்டு வருகின்றார். சிறப்பான திட்டங்களை கொண்டு வந்து அத்திட்டங்களின் பயன்கள் முழுமையாக மக்களுக்கு சென்று சேரும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றார். அதேபோல்,
தனியார் துறை மற்றும் அரசு துறை வேலை
வாய்ப்புகளிலும் மாற்று
திறனாளிகளின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர், பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை வகுத்து கொண்டிருக்கிறார்.
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் வழியில் சிறப்பாக செயலாற்றி கொண்டிருக்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர், மாற்றுத்
திறனாளிகளின் நலனை கருத்திற்கொண்டு மாற்றுத்
திறனாளிகள் நலத்துறையை தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுத்தி கொண்டிருக்
கின்றார். அனைத்து துறைகளிலும் தகுதியின் அடிப்படையில் பணியமர்த்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தேசிய அளவிலும் மாநில அளவிலும் நடைபெறக்கூடிய விளையாட்டுப் போட்டிகளில் மாற்றுத்திறனாளியான
மாரியப்பன் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றுள்ளார். வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் உங்களுடைய திறமையை வெளிகாட்டி கொண்டிருக்கிறீர்கள் என்பதில் மாற்றுக்
கருத்து இல்லை.
கிராமப்புறங்களில் வசிக்கக்கூடிய மாற்றுத்
திறனாளிகளுக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தியுள்ளார். பல்வேறு தொழில்களை எல்லாம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கடனுதவி பெற்று தொழில்
ரீதியாகவும், மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கமாகும். தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்
பொறுப்பேற்ற ஆறு மாத காலத்தில் இரண்டு மாதம் கொரோனா காலமாகவும் இரண்டு மாதம் சட்டமன்ற கூட்டத்தொடர் காலமாகவும் ,மற்றும் இரண்டு மாதம் 9 மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் காலமாகவும், நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது, மழைகாலம் ஆரம்பித்து விட்ட சூழ்நிலையிலும் தமிழ்நாடு முதலமைச்சர், மக்களுக்கு பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே செயல்பட்டு வருகின்றார் என்று, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
பி.மூர்த்தி தெரிவித்தார்.
முன்னதாக, மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனம் (பெட்ரோல் ஸ்கூட்டர்கள்) 16 பயனாளிகளுக்கு ரூ.991280 மதிப்பிலும், பேட்டரியால் இயங்கும் சக்கரநாற்காலி 7 பயனாளிகளுக்கு ரூ.699993 மதிப்பிலும், பார்வையற்றோருக்கான எலக்ட்ரானிக் பிரைய்லி ரீடர் 2 பயனாளிகளுக்கு ரூ.68544 மதிப்பிலும் உருப்பெருக்கி 4 பயனாளிகளுக்கு ரூ.28728 மதிப்பிலும், கால் தாங்கிகள் 1 பயனாளிக்கு ரூ.540 மதிப்பிலும் வங்கிக் கடன் மான்யம் 5 பயனாளிகளுக்கு ரூ.11600 மதிப்பிலும் மனவளர்ச்சி குன்றியோர்களுக்கான பராமரிப்பு உதவித் தொகை (வாழ்நாள் முழுவதும் ரூ.1500 மாதந்தோறும் நவம்பர்-2021 முதல் வழங்கப்படும்) 5 பயனாளிகளுக்கு ரூ.7500மதிப்பிலும் என மொத்தம் 40 பயனாளிகளுக்கு ரூ.1913185 இலட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்
திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், சட்டமன்ற உறுப்பினர்கள்
அ.வெங்கடேசன் (சோழவந்தான்)
மு.பூமிநாதன் (மதுரை தெற்கு), மாவட்ட வருவாய் அலுவலர்
கோ.செந்தில்குமாரி மாவட்ட மாற்றுத்
திறனாளிகள் நல அலுவலர்
இரா.
இரவிச்சந்திரன், செவித்திறன் மற்றும் பேச்சுப் பயிற்சியாளர்
வீ.ஹெமலதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: