மதுரை நகர குற்ற செய்திகள்:

எஸ்.எஸ். காலனியில்
இரவல் வாங்கிச் சென்ற காரை அடகு வைத்த வாலிபர் கைது:

மதுரை:

உறவினர் வீட்டு விசேஷத்திற்கு செல்வதாக கூறி இரவல் வாங்கிச் சென்ற காரை அடகு வைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை பைபாஸ் ரோடு ஸ்டேட் பேங்க் ஆபீஸர் காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் நம்பிராஜன் 32. இவருக்கு சொந்தமான காரை அழகப்பன் என்பவர் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு செல்வதாக கூறி இரவலாக வாங்கி சென்றார்.
பின்னர், அந்த காரை திருப்பி தரவில்லை .இந்த நிலையில் கார் உரிமையாளர் விசாரித்தபோது, அவருடைய காரை அவருக்குத் தெரியாமல் வேறொருவரிடம் அடகுவைத்தது தெரியவந்தது.
இதுகுறித்து, நம்பிராஜன் எஸ்.எஸ்.காலனி
போலீஸில் புகார் செய்தார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து அழகப்பன், பிரதீப் என்ற கிளிண்டன் மற்றும் பொன்மேனி குடியானவர் 2-வது தெருவைச் சேர்ந்த பிரகாஷ் மகன் அருண் பாண்டியன் 27. ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து அருண் பாண்டியனை கைது செய்தனர்.
மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

எஸ். எஸ். காலனியில்
வலிப்பு நோய் வந்த வாலிபர் திடீர் சாவு
போலீஸ் விசாரணை:

மதுரை:

மதுரை பொன்மேனியை சேர்ந்தவர் வெள்ளிமலை மகன் சரவணன் 25. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இந்நிலையில், வீட்டில் இருந்த போது திடீரென்று வலிப்பு நோய் வந்து மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து, தந்தை வெள்ளிமலை கொடுத்த புகாரில், எஸ் எஸ் காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கே புதூரில்
மூதாட்டியை தாக்கிய மூன்று சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது:

மதுரை கே.புதூரில் முன்விரோதம் காரணமாக, மூதாட்டியை தாக்கிய 3 சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை
புதூர் கற்பகம் நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் பிச்சையம்மாள் 60. கே புதூர் டோபி காலனியை சேர்ந்த மூன்று சிறுவர்கள் மற்றும் ராஜேஷ் ஆகிய 4 பேரும் முன்விரோதம் காரணமாக பிச்சையம்மாவை தாக்கியுள்ளனர் .
இந்த சம்பவம் குறித்து, மூதாட்டி பிச்சையம்மாள் புதூர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து 3 சிறுவர்கள் உள்பட ராஜேஷை கைது செய்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: