லாரி மோதி, கூலித்தொழிலாளி பலி:

முதுகுடி தேசிய நெடுஞ்சாலையில் கூலித்தொழிலாளி லாரி மோதி விபத்தில் பலி :

ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், முதுகுடி அடுத்துள்ள நல்லமநாயக்கன்பட்டி விளக்குப் பகுதியில் கரிவலம் வந்த நல்லூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் வயது 35. இவர், முதுகுடி பகுதியில் தனியார் பிளாஸ்டிக் கம்பெனிகள் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார் .
பணி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது, திருநெல்வேலி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, சங்கரன்
கோவிலிருந்து
வந்த டிப்பர் லாரி மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து, வந்த போலீசார் உடலை கைப்பற்றி இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து, வழக்கு பதிவுப் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: