மதுரையில் குளமாக மாறி வரும் சாலைகள்: மாந கராட்சி கண்டு கொள்ளுமா?

சாலையில் குளம் போல தேங்கியுள்ள மழை நீரை மதுரை மாநகராட்சி அகற்ற ஆர்வம் காட்டுமா?

மதுரை:

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி, வார்டு எண். 30, 31ஆகிய பகுதிகளான,
மதுரை கோமதிபுரம், ஜூப்பிலி டவுன், வீரவாஞ்சி தெருக்களில் குளம் போல தேங்கியுள்ள மழைநீர், கழிவு நீர், இதை மாநகராட்சியினர் அகற்ற முன்வர வேண்டும் என, குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கோரியுள்ளனர்.
மேலும், மதுரை கோமதிபுரம், தாழைவீதி, திருக்குறள் வீதிகளில், கழிவுநீர் கால்வாய் மூடி உடைந்த நிலையில் திறந்தபடியே உள்ளது.
இது தொடர்பாக, மதுரை மாநகராட்சி 30-வது வார்டு உதவி பொறியாளரின் கவனத்துக்கும், இப் பகுதி மக்கள் சீர் செய்ய கொண்டு சென்றுள்ளனராம்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: