பொன்மேனி பகுதியில் கிருதுமால் நதியில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியதால் மக்கள் அவதி:
மதுரை:
மதுரை மாவட்டம் மாடக் குளம் கண்மாய் அருகே அமைந்துள்ள பொன்மேனி பகுதியில் சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக மாடக்குளம் கண்மாயில் நீர் வரத்து அதிகமாக வந்து கொண்டு உள்ளது. இதனையடுத்து, கிருதுமால் நதி கால்வாயில் உபரி நீர் எடுத்து விடப்பட்டது. இதனையடுத்து, கால்வாயில் உள்ள ஆகாய தாமரையால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் குடியிருப்பு பகுதியில் புகுந்துள்ளது உடனடியாக அப்பகுதி மக்கள் மாநகராட்சி உதவி பொறியாளர் பாலமுருகன் அவர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, உதவி பொறியாளர் பாலமுருகன் அந்த பகுதிக்கு சென்று கால்வாயில் உள்ள அடைப்புகளை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த பணியில் மாநகராட்சி பணியாளர்கள் 15-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.