விவசாயிகள் ஆலோசணைக் கூட்டம்:

காரியாபட்டியில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் :

காரியாபட்டி:

காரியாபட்டியில் விவசாயிகள் ஆலோசனைக்க கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வேளாண் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் சார்பாக வட்டார தொழில்நுட்ப குழுஉறுப்பினர்கள் மற்றும் விவசாய ஆலோசனைக்குழு உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
உதவி வேளாண்மை இயக்குனர் செல்வராணி தலைமை வகித்தார். வேளாண் உதவி அலுவலர் முருகேசன் தோட்டக்கலைத் துறை அலுவலர் ஆயிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், உலக மண்வள தினம், அரசு வழங்கும் வேளாண்மை வளர்ச்சி திட்டங்கள். தோட்டக்கலை பயிர் சாகுபடி வேளாண் வணிகம் மற்றும் விற்பனை 2021-22 ஆண்டு விரிவாக்க சிரமமா திட்டத்தின் செயல்பாடுகள் பூச்சி நோய் கட்டுபாடு குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜேஸ் உதவி வேளாணமை அலுவலர் பாண்டீஸ்வர், உதவி தொழில்நுட்ப மேலாளர் வீரபாண்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: