மதுரை நகரில் பலத்த மழை: குளம் போல மாறிய சா லைகள்:

மதுரையில் பலத்த மழை: குளம் போல மாறிய சாலைகள்:
மதுரை:

மதுரை நகரில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், சாலைகள் பல குளம் போல காட்சியளிக்கின்றன.
மேலும், சாலைகளில் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளதால், சாலைகளில் பயணிக்க, பாத சாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக உள்ளது.
மதுரை கோமதிபுரம் தாழை வீதி, ஜூப்பிலி டவுன், மேலமடை தாசில்தார் வீரவாஞ்சி வீதி, அன்புமலர், சௌபாக்யா தெருக்களில், சாக்கடை நீருடன், மழைநீரும் சேர்ந்து தெருக்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதேபோல, மதுரை- சிவகங்கை ரோடு, பி.சி. பெருங்காயம் அருகே சாலையில், மழைநீர் தேங்கியுள்ளன.
ஆகவே, மதுரை மாநகராட்சி மண்டல உதவி ஆணையாளர்கள், சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, இப் பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: