சோழவந்தான் பகுதியில் மிதமான வெயில்:

சோழவந்தான் பகுதியில் இன்று காலை முதல் இதமான வெயில் அடிக்க தொடங்கியது:

சோழவந்தான்:

சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்
கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழை இன்று காலை சற்று ஓய்ந்து மிதமான வெயில் அடிக்க தொடங்கியது.
மதுரை மாவட்டத்தின், புறநகர் பகுதிகளான சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக தொடர் மழை பெய்து வந்த நிலையில், இன்று காலை முதல் இதமான வெயில் அடிக்க தொடங்கியது. இதனால், தங்களின் இயல்பு வாழ்க்கையில் இருந்து மீண்ட பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். மேலும், வைகையில் வரும் நீரின் அளவு குறைந்து உள்ளதால், கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இருந்தாலும், ஒரு சில பகுதிகளில் தண்ணீர் இன்னும் குடியிருப்பு பகுதியில் இருப்பதால், அரசு உடனடியாக தலையிட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் இருக்கும் நீரை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: