மதுரையில், குண்டர் சட்டத்தில்
5 பேர் கைது:
மதுரை:
மதுரையில், குண்டர் சட்டத்தில் ஐந்து பேரை போலீஸார்
அதிரடியாக கைது செய்தனர்.
மதுரையில் பல்வேறு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு, பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபர்களை மதுரை நகர காவல் ஆணையர்
பிரேம் ஆனந்த் சின்கா ,குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டு இருந்தார். அவருடைய உத்தரவின்பேரில், எஸ். எஸ். காலனி போலீஸார், சம்மட்டிபுரம் முத்து நகர் 2-வது தெருவை சேர்ந்த நல்ல மாயன் மகன் சரத்குமார் 29, திருப்பரங்குன்றம் போலீஸார் துர்கா காலனியைச் சேர்ந்த பெரியசாமி மகன் நாகராஜன் 55, ஜெய்ஹிந்திபுரம் போலீஸார் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த கருப்பன் மகன்பாலு 59, சுப்பிரமணிய
புரத்தை சேர்ந்த காசி மகன் தண்டபாணி 33 ,தல்லாகுளம்
போலீஸார் பிள்ளையார் கோவில் சேர்ந்த மாரிமுத்து மகன் மார்க்கண்டன் 30 ஆகிய 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.