சாத்தூரில் அதிக மழை:

விருதுநகர் மாவட்டத்தில் அதிகபட்சமாக சாத்தூர் பகுதியில் பலத்த மழை…..

விருதுநகர் :

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் இருந்து இரவு வரை, அநேக இடங்களில் பலத்த மழை பெய்தது. நீண்ட வருடங்களுக்கு பின்பு மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிகபட்சமாக சாத்தூரில் 74 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. திருவில்லிபுத்தூரில் 70, சிவகாசியில் 69, ராஜபாளையத்தில் 64, திருச்சுழியில் 62, அருப்புக்கோட்டையில் 62, விருதுநகரில் 50, வெம்பக்கோட்டை பகுதியில் 60, காரியாபட்டியில் 38, கோவிலாங்குளத்தில் 32 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் குறைந்த அளவாக பிளவக்கல் அணைப் பகுதியில் 6 மில்லி மீட்டரும், வத்திராயிருப்பு பகுதியில் 5 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: