வாடிப்பட்டியில், இருசக்கர வாகனம் மோதல்: பரபரப்பு:

வாடிப்பட்டியில், அதிவேகமாக வந்த இருசக்கர வாகனங்கள் சாலையில் நேருக்கு நேர் மோதி விபத்து மோதிய வேகத்தில் இளைஞர்கள் தூக்கிவீசப்படும் பரபரப்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு:

மதுரை:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை சேர்ந்த தியானேஸ் என்ற கல்லூரி மாணவர் தனது நண்பருடன் வாடிப்பட்டியிலிருந்து மதுரை நோக்கி செல்ல தனது மோட்டார் சைக்கிளில்,
இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக மதுரை நோக்கி சென்றபோது, எதிர்புறமாக மற்றொரு இருசக்கர வாகனத்தில்
தேசபுனிதன், சந்திரன் என்ற இருவரும் எதிர் திசையில் சென்றபோது, மின்னல் வேகத்தில் இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில், மோதிய வேகத்தில் 4 பேரும் சாலையில் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்த, பதைபதைக்கும் காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்தது.
பொதுமக்கள் உடனடியாக 4 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 4 பேரையும் அனுப்பி வைத்தனர்.
இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேரும் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: