ஜவுளிக் கடையில் மாடியில் இருந்த விழுந்த குழந்தைக்கு சிகிச்சைக்கு அளிக்க கோரிக்கை:

மதுரையில் ஜவுளிக்கடையில் ஐந்தாம் மாடியில் இருந்து தவறி விழுந்த விவகாரம் : குழந்தைக்கு சிகிச்சை அளிக்க தாய் கண்ணீர் மல்க கோரிக்கை.!!!*

மதுரை:

மதுரை மகபூப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் இவருடைய ஏழு வயது மகன் நித்தீஷ் தீனா,இவர் கடந்த 2ஆம் தேதி மதுரை பைக்கரா பகுதியில் இருக்கக்கூடிய பிரபல ஜவுளி கடையில் ஜவுளி எடுக்க சென்றபோது ஐந்தாவது தளத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்,அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர், இந்நிலையில் குழந்தை சிகிச்சையை முழுமையாக நிறைவடையும் முன்பாகவே தனியார் மருத்துவமனை நிர்வாகம் குழந்தை அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்துவிட்டதாகவும் குழந்தைக்கு சிகிச்சை பார்ப்பதற்கு போதுமான வருமானம் இல்லாததால் அலட்சியமாக கவனக்குறைவாக செயல்பட்ட ஜவுளிக்கடை நிர்வாகம் மூலம் உரிய நிவாரணம் பெற்று கொடுக்க வேண்டும் மேலும் குழந்தைக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் எனக்கூறி குடும்பத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கண்ணீர் மல்க மனு அளித்தனர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: