கமலஹாசன் நலம் பெற வேண்டி, மஹா யாகம்:

உலக நன்மைக்காகவும், கமலஹாசன் உடல் நலம் பெற வேண்டி, மகாயாகம்:

மதுரை:

மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமலஹாசன் உடல் நலம் பெற வேண்டியும், உலக நன்மைக்காகவும், மதுரை வடக்கு தொகுதி மக்கள் நீதி மையத்தின் சார்பில் சிறப்பு யாகம் மதுரை மேலமடை தாசில்தார் நகர் சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் புதன்கிழமை காலை நடைபெற்றது.
மதுரை வடக்கு தொகுதி மக்கள் நீதி மையத்தின் சார்பில் நடந்த இந்த மகா யாகத்துக்கு, அண்ணாநகர் முத்துராமன் தலைமை வகித்தார்.
முருகன், குணா அலி முன்னிலை வகித்தார். பூமிராஜா, கமல் முருகன் ஆகியோர், சிறப்பு பூஜைகளை தொடங்கி வைத்தனர்.
கமலஹாசன் பெயரில் சிறப்பு அபிஷேக, அர்ச்சணை வழிபாடுகள் நடைபெற்றன.
முன்னதாக, உலக நன்மைக்காக மகாயாகமானது நடந்தது.
பழனி முருகன், அண்ணாநகர் முத்துராமன் ஆகியோர் பிரசாதங்களை வழங்கினர்.
இதற்கான ஏற்பாடுகளை, மதுரை வடக்கு தொகுதி மக்கள் நீதி மையத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: