மதுரை கிரைம் செய்திகள்:

கட்டிடத்தில் வேலை செய்த தொழிலாளி
தவறி விழுந்து பலி:

மதுரை :

கட்டிடத்தில் வேலை செய்த போது தவறி விழுந்த தொழிலாளி பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை அருகே சிலைமான் சத்யா நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் 50. இவர், கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் .
அவர் ,அவனியாபுரம் நேதாஜி நகரில் உள்ள ஒரு புதிய கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.
அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து, அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப பிரச்சனையால்
கணவர் தூக்குப்போட்டு தற்கொலை:
மனைவி புகாரில் போலீஸ் விசாரணை:

மதுரை:

மதுரை கே .புதூர் அழகர் நகர் 5 வது தெருவை சேர்ந்தவர் பாண்டீஸ்வரன் 31. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் அடிக்கடி மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால், மனமுடைந்த பாண்டீஸ்வரன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மனைவி கார்த்திகா வேணி கொடுத்த புகாரில் கே .புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநகரில்
பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது:

மதுரை
திருநகர் சௌபாக்கிய நகர் கண்மாய் கரை அருகே பணம் வைத்து சூதாடுவதாக திரு நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அங்கு பணம் வைத்து சூதாடியதாக, ஜோசப் நகரைச் சேர்ந்த விஜயன் 38. என்பவர் உள்பட 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து சூதாடிய சீட்டுக்களையும் பணம் ரூபாய் ஐநூறையும் பறிமுதல் செய்தனர்.

அவனியாபுரத்தில்
பொதுமக்களை வாளால் மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்:

மதுரை அவனியாபுரம் பைபாஸ் ரோடு செம்பூரணி ரோடு சந்திப்பில், வாலிபர் ஒருவர் நீண்ட வாள் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு அந்த வழியாகச் செல்லும் பொது மக்களை மிரட்டி அலறியடித்து ஓட செய்து கொண்டிருந்ததார்.
இந்த தகவல் அறிந்த, அவனியாபுரம் போலீசார் அங்கு சென்றுஅந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவரிடம் இருந்த வாளையும் பறிமுதல் செய்தனர்.பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மதிச்சியத்தை சேர்ந்த திரு மூர்த்தி மகன் பரமேஸ்வரன் 24 .என்பது தெரிய வந்தது.அவர் மீது வழக்குப்பதிவுசெய்து அவரை கைது செய்தனர்.

மேல அனுப்பானடியில்
பெண்ணிடம் செயின் பறிப்பு: வாலிபர் கைது:

மதுரை, பெண்ணிடம் செயின் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அனுப்பானடி வாசுகி தெருவை சேர்ந்தவர் கார்த்திக் மனைவி லட்சுமி 28.இவர் மேல அனுப்பானடி தீயணைப்பு நிலையம் பின்புறமாக சென்றபோது, அந்த பெண் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை வாலிபர் ஒருவர் பறித்து சென்றுவிட்டார். இந்த சம்பவம் குறித்து ,லட்சுமி கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரிடம், செயின் பறித்த மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச்சேர்ந்த முனியாண்டி மகன் பரத் 20 என்ற வாலிபரை கைது செய்தனர்.

கனடாவில் வேலை வாங்கி தருவதாக
பல லட்சம் மோசடி: கணவன்-மனைவி உள்பட 3 பேரிடம் விசாரணை:

மதுரை :

கனடாவில் வேலை வாங்கி தருவதாக ரூபாய் பல ட்சம் மோசடி செய்துள்ளதாக கணவன்-மனைவி உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லாபுரம் மணிகண்டன் தெருவை சேர்ந்தவர் தினேஷ்பாபு 31. ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை சேர்ந்தவர் குருநாதன் 31 அவரது மனைவி பானுப்பிரியா. உறவினர் முருகேசன் மூவரும் கனடாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி ,மதுரை விமான நிலையத்தில் வைத்து தினேஷ்பாபுவிடம் ரூபாய் 10 லட்சத்து 34 ஆயிரம் பெற்றுள்ளனர். பின்னர், வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதாக தெரிய வந்தது .
இதைத் தொடர்ந்து, தினேஷ்பாபு அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார், குருநாதன் மனைவி பானுப்பிரியா உறவினர் முருகேசன் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: