வாடிப்பட்டிக்கு வந்த முன்னாள் முதல்வருக ்கு அதிமுகவினர் வரவேற்பு:

வாடிப்பட்டி க்கு வருகை புரிந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது:

சோழவந்தான் நவ 21

மதுரையில் நடைபெற்ற அதிமுக இளைஞரணி செயலாளர் சோலைராஜா இல்ல திருமண விழாவில் பங்கேற்க வருகை புரிந்த கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வாடிப்பட்டி அருகே மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர் பி உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் வரவேற்பு கொடுத்தனர்.
உடன், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் அலங்காநல்லூர் ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ், வாடிப்பட்டி பேரூர் கழக செயலாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் வாடிப்பட்டி வடக்கு தெற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றம் வாடிப்பட்டி சோழவந்தான் பேரூர் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: