மேலூரில், நூதன வழிபாடு:

*மேலூர் அருகே, விவசாயம் செழிக்க வேண்டி, கண்மாய் மண்னை மலைப் போல் அள்ளிப்போட்டு மக்கள் வினோத வழிப்பாடு, நீர்நிலைகளை பாதுகாக்க முன்னோர்கள் செய்த வழிபாட்டினை பல தலைமுறைகளாக தொடர்வதாக மக்கள் பெருமிதம்…*

மேலூர் :

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த நரசிங்கம்பட்டி பகுதியில் பெருமாள்மலை உள்ளது. அதன் அடிவாரத்தில் மலைச்சாமி கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருநாள் அன்று திருவிழா நடைபெறுவது வழக்கம் . அதன்படி இந்தாண்டு திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இதற்காக மேலூர், நரசிங்கம்பட்டி, வெள்ளலூர், சிட்டம்பட்டி, கிடாரிப்பட்டி, . உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, காலை முதலே மலையின் அடிவாரத்தில் உள்ள சேங்கை கண்மாயில் இருந்து , மண்ணை கைகளால் அள்ளி அருகில் மலைபோல் குவிந்து கிடக்கும் மண்குவியலில் 3 முறை கொட்டி வலம் வருகின்றனர். இதனுடன் உப்பு மற்றும் மிளகு கொட்டியும் வழிபாடு நடத்துகின்றனர், மேலும் இந்த சேங்கை கண்மாயின் நீரை எடுத்துச் சென்று விளை நிலங்களில் தெளிப்பதால், தங்களது வேண்டுதல் நிறைவேறுவதுடன், தங்களுடைய விளை நிலத்தில் விவசாயம் செழிக்கும் என்பது இவர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் இவ்வாறு செய்வதால் மழைநீரை சேகரிக்க தூர்வாருதலின் அவசியம் குறித்து முன்னோர்களால் வகுக்கப்பட்டதை தாங்கள் கடைபிடிப்பதாக கிராமத்தினர் பெருமிதம் தெரிவிக்கின்றனர். இதனையொட்டி மேலூர் காவல்த்துறையினரின் பாதுகாப்பும் அதிகளவு போடப்பட்டிருந்தது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: