கிராமத்து புகார் பெட்டி:

விக்கிரமங்கலம் பகுதிகளில் புகார் பெட்டி:

சோழவந்தான:

மதுரைமாவட்டம்,
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கிராமங்களில் 3 இடத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டது. மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின்பேரில், உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லூ ஆலோசனையின்
பேரில், விக்கிரமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட எரவார்பட்டி ஊராட்சி மன்றம் அலுவலகத்திற்கு முன்பாக விக்கிரமங்கலம் காவல் நிலையத்திலிருந்து பொதுமக்களுக்கு புகார் பெட்டி வைக்கப்பட்டது. இதில், இன்ஸ்பெக்டர் சிவசக்தி சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றிவேல் ராஜேந்திரன் ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டி துணைத் தலைவர் செந்தாமரை, ஊராட்சி செயலாளர் மலைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், நரியம்பட்டி பிரிவு, நடுமுதலைக்குளம் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு போலீசார் புகார் பெட்டி வைத்துள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: