மதுரை நகரில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள்: ஆணையாளர் ஆய்வு:

மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும்
பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், ஆய்வு:

மதுரை:

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மத்திய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மண்டலம் எண்.1 வார்டு எண்.10 ஆரப்பாளையம் டி.டி.1 மற்றும் 2வது குறுக்குத் தெருவில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டிலும், டி.டி. மெயின் ரோட்டில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலை பணியினையும், வார்டு எண்.11 பொன்னகரம் 1வது தெருவில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு பணியினையும், வார்டு எண்.10 மறவர் தெரு சலவைக்கூடத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றினையும், வார்டு எண்.17 எல்லீஸ் நகர் போடி லைன் பகுதியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சாலை பணியினையும், வார்டு எண்.82 சிம்மக்கல் வடக்கு லைன் 6வது தெரு மற்றும் கந்தசாமி பிள்ளை காம்பவுண்டு தெருவில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையினையம், வார்டு எண்.1 மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14 லட்சம் மதிப்பீடடில் பாண்டியன் நகர் பகுதியில் சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளதையும், வார்டு எண்.22 விராட்டிபத்து முத்து தேவர் காலனி குறுக்குத் தெருவில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையினையும், மாடக்குளம் பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய கூடத்தினையும், அருகில் செயல்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுவது குறித்தும் என மொத்தம் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆணையாளர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, பெரியார் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளையும் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர்கள் மனோகரன், ரவிச்சந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர்
மகேஸ்வரன், உதவிப் பொறியாளர்கள்
ஆறுமகம், .ராஜசீலி, உட்பட மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: