கிணற்றில் தவறி விழுந்து பலி:

கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி

உசிலம்பட்டி :

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்ன பாலார்பட்டியைச் சேர்ந்த கருப்பத்தேவர் என்ற முதியவர் அவரது தோட்டத்து கிணற்றின் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது 50 அடி ஆழமான கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் தங்கம் தலைமையிலான தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் உத்தப்பநாயக்கணூர் போலிசார் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்து கிணற்றிலிருந்து உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: