ஊராட்சியில், ஆக்கிரமிப்பு அகற்றுவது ஒத் தி வைப்பு:

விக்கிரமங்கலம் ஊராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றுவது ஒத்திவைப்பு:

சோழவந்தான்:

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட, கீழ பெருமாள்பட்டி கிராமத்தில் புதிதாக வீடு கட்டுபவர் தெருவில் வாசப்படி கட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்த இங்குள்ள மகாராஜன் என்பவர் செல்லம்பட்டி ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்திருந்தார். இதன்பேரில், வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவின் பேரில்,
கீழ பெருமாள்பட்டி கிராமத்தில், செல்லம்பட்டி வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் முத்துமணி, சர்வேயர் கவிதா தேவி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அனிதா, விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் உட்பட போலீசார் பணியாளர்கள் ஆகியோர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்காக குவிக்கப்
பட்டிருந்தனர். விக்கிரமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் கலியுக நாதன், ஊராட்சி செயலாளர் பால்பாண்டி ஆகியோர் முன்னிலையில் வீட்டு வாசப்படி ஆக்கிரமித்து கட்டி இருந்தவரின் வேண்டுகோளை ஏற்று, பத்துநாள் அவகாசம் கொடுத்து பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேட்டுக்கொண்டனர். இந்த சமாதான பேச்சுவார்த்தைக்கு புகார் கொடுத்த மகாராஜன் ஒத்துக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதனால் ,அங்கு ஒரே பரபரப்பாக காணப்பட்டது. பின்னர்
மாலை வரை காத்திருந்த அதிகாரிகள் மற்றும்
போலீசார் சென்று விட்டதால், அங்கு இருந்த கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: