இடி தாக்கி தொழிலாளி மற்றும் பசுமாடு பலி: மதுரை அருகே பரிதாபம்:

திருப்பரங்குன்றம் அருகே இடி தாக்கி கட்டடத்தொழிலாளி, மற்றும் பசுமாடு பலி:

மதுரை:

மதுரை மாவட்டம்
திருப்பரங்குன்றம், தாலுகா ,பெருங்குடி அருகே வளையபட்டி கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த கட்டடத்
தொழிலாளி மீது இடி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பெருங்குடியை அடுத்த வளையபட்டியைச் சேர்ந்த ராஜூ என்பவரது மகன் பாலு (31). கட்டடத்தொழிலாளி. இவர், வீட்டின் அருகே பசுமாட்டிற்கு வைக்கோல் வைத்துக்
கொண்டிருந்தபோது, திடீரென இடி தாக்கியதில் பாலுவும், அவரது மாடும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருங்குடி போலீஸார் பாலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து, பெருங்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: