சிறப்பு மருத்துவ முகாம்:

திருப்பரங்குன்றம் பகுதியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்:

மதுரை:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு, உட்பட்ட வலையங்குளம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் வட்டார மருத்துவர் சிவகுமர், வட்டார சுகாதர மேற்பார்வையாளர் தங்கசாமி
வலையங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் முத்து பிள்ளைப் பெருமாள் துணைத் தலைவர் முத்துராமன் ஊராட்சி செயலாளர் கிருஷ்ணன் மற்றும் 80 க்கும் மேற்பட்ட மருத்துவ, மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மருத்துவ முகாமில் 800 பேர் கலந்து கொண்டனர்.
இந்த மருத்துவ முகாமில், ரத்த அழுத்தம், ரத்தப் பரிசோதனை, இசிஜி ,ஸ்கேன், சுகர், பிபி, மனநலம் | மற்றும் சித்த மருத்துவம் மூலம் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இம் முகாமில், சுமார் 15க்கும் மேற்பட்ட மருத்துவ அலுவலர்கள், சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருந்தாளுநர்கள் ஆய்வு நிபுணர்கள். மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் என மொத்தம் சுமார் 80 பணியாளர்கள் உள்பட 800 பேர் மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: