மதுரை நகர குற்றச் செய்திகள்:

விராட்டித்தில்
கடையை உடைத்து 48,000 கொள்ளை
மதுரை நவ 13:

மதுரை அருகே
விராட்டிபத்தில், கடையை உடைத்து ரூபாய் 48,000 கொள்ளையடித்துச் சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர் .
அரசரடிமெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர், விராட்டிபத்தில் கடைவைத்து வியாபாரம் நடத்தி வருகிறார். வழக்கம் போல் ,கடையை மூடி விட்டு சென்றவர் மறுநாள் வந்து திறக்க வந்தபோது, கடையின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. கடையில் வியாபாரம் செய்து வைத்திருந்த பணம் ரூபாய் 48ஆயிரத்தையும் 2 செல்போன்களையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து, ராஜேந்திரன் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

எஸ் எஸ் காலனியில்
திருமணசெய்துகொள்ள விருப்பமில்லாத
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை:

மதுரை
பைபாஸ்ரோடு ஹரிணிதெரு துரைச்சாமி நகரை சேர்ந்தவர் சுந்தரபாண்டி மகள் சுப்ரியா 26. இவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தனர். தற்போது திருமணம் செய்ய விருப்பம் இல்லை என்று சுப்ரியா கூறியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மனமுடைந்த சுப்ரியா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து, எஸ் எஸ் காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழங்காநத்தத்தில்
கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக
மனைவி தூக்குப்போட்டு தற்கொலை :

மதுரை
பழங்காநத்தம் பசும்பொன் தெருவை சேர்ந்தவர் சக்தி மனைவி பாண்டிச்செல்வி 29.கணவர் சக்திக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால், கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு அடிக்கடி ஏற்பட்டது .இதன் காரணமாக மனமுடைந்த பாண்டிச் செல்வி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து, சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலை இல்லை திருமணமும் ஆகவில்லை
மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை:

மதுரை
தெற்கு வெளி வீதி சப்பாணி கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன் மகன் விக்னேஸ்வரன் 37. இவருக்கு நிரந்தர வேலையில்லை இதனால் திருமணமும் ஆகவில்லை. இதன் காரணமாக மனமுடைந்த விக்னேஸ்வரன் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து, தெற்கு வாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்விரோதத்தில் மருத்துவமனைக்குள் புகுந்து வாலிபர் மீது தாக்குதல்
3பேர் கைது:
மதுரை
முன்விரோதம் காரணமாக மருத்துவமனைக்குள் புகுந்து வாலிபரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பழங்காநத்தம் தெற்குத் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் மகன் தினேஷ்குமார் 29. இவருக்கும் எஸ் எஸ் காலனி பாரதியார் 2-வது தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் நாகராஜ் 24 க்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மருத்துவமனையில் வரவேற்பறையில் இருந்த தினேஷ் குமாரை, நாகராஜன் அவரது சகோதரர் சிவபெருமான் மற்றும் நண்பர் பாலச்சந்திரன் ஆகிய மூவரும் புகுந்து இரும்பு கம்பியால் தாக்கி உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து, தினேஷ் குமார் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜ் 24 ,சிவபெருமாள் 20, பாலச்சந்திர 19 மூவரையும் கைது செய்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: