முன்களப்பணியாளர்களுக்கு, பொது நிவாரண நி தி:

கொரோனா நோய்தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு
உயிரிழந்த முன்கள பணியாளர்களான 5 அரசு மருத்துவர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி தொகை ரூ.25 இலட்சத்திற்கான காசோலையினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் வழங்கினார்:

மதுரை:

கோவிட்-19 கொரோனா நோய்தொற்று தடுப்பு பணியின் போது நோய் தொற்று ஏற்பட்டு மரணமடைந்த முன்கள பணியாளர்களான 5 அரசு மருத்துவர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி தொகை தலா ரூ.25 இலட்சம் என, மொத்தம் 1 கோடியே 25 இலட்சத்திற்கான காசோலையினை உயிரிழந்த மருத்துவர்களின் வாரிசுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் வழங்கினார்.
இந் நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (சுகாதாரம்)
வெங்கடாசலம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: