சோழவந்தான் அருகே இளைஞர் கொலை வழக்கில் 4 ப ேர் கைது:

கரட்டுபட்டியில் வாலிபரை கொலை செய்து, உடலில் கல்லைகட்டி கிணற்றில் வீசிய வழக்கில் குற்றவாளிகள் 4 பேர் கைது:

மதுரை:

மதுரைமாவட்டம் வாடிப்பட்டி அருகே, கரட்டுபட்டியைச் சேர்ந்தவர் கோட்டைச்சாமி. (24). இவர், தீபாவளியன்று வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் ஊருக்கு அருகேயுள்ள விவசாய கிணற்றில் கோட்டைசாமி கழுத்தில் வெட்டுகாயங்
களுடன் உடலில் கயிறு கட்டபட்ட நிலையில் சடலமாக மிதந்தார். தகவலறிந்த, போலீசார், தீயணைப்பு துறையினரின் உதவியோடு வாலிபரின் சடலத்தை மீட்டு, வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர். மேலும், இந்த வழக்கில் கோட்டைசாமியின் கூட்டாளிகளான சுபாஷ், ஜெயசூர்யா, பூவேந்திரன், சிவா ஆகிய நான்கு பேரும் முனவிரோதம் காரணமாக கோட்டைசாமியை மதுகுடிக்க அழைத்து சென்று கொலைசெய்ததாக தனிப்படையினரின் தீவிர விசாரணையில் தெரியவந்தது. இவர்களை,
கைது செய்த சோழவந்தான் போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: