அணைகள் இணைப்பு திட்டம்: ஆய்வு:

முல்லைப் பெரியாறு வைகை, சாத்தையாறு அணை இணைப்பு திட்டம்
இந்தியாவின் தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு:

அலங்காநல்லூர்:

மழை நீர் சேமிப்பு திட்டத்தின் கீழ் இந்தியாவின் 850 கிராமங்களில் 4,500 தடுப்பணை
களையும் தண்ணீர் சேமிப்புக் குளங்களையும் கட்டியதோடு,காணாமல் போன பல ஆறுகளுக்குப் புத்துயிரும் கொடுத்தவர்.இந்தியாவின் தண்ணீர் மனிதர் என்று அழைக்கப்படும் ராஜேந்திர சிங் சாத்தியார் அணையை பாரவையிட்டு நீர் மேலாண்மை விரிவாக்கம் செய்து அணையில் நிரந்தரமாக நீர் நிரப்ப ஆய்வு செய்தார்.
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ளது சாத்தியார் அணை 29 அடிகொள்ளளவு கொண்ட இந்த அணை கடந்த பல ஆண்டுகளாக நீர்வரத்து இன்றி வறண்டு காணப்பட்டது.
கடந்த ஆண்டு இந்த அணையின் மூலம் பாசன வசதி பெறும் 10 கண்மாய் விவசாயிகள் ஒன்று திரண்டு அணைக்கு வர வேண்டிய நீர் வரத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீரை ஒருங்கிணைத்து அணைக்கு கொண்டு வந்து சேர்த்ததன் விளைவாக சாத்தையாறு அணை கடந்த ஆண்டு அணை நிரம்பி மறுகால் பாய்ந்தது.
இந்த அணையின் மூலம் பாசன வசதி பெறும்10 கண்மாய்களும் நிரம்பியது.
தொடர்ந்து இந்த ஆண்டு வரை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் 15 அடிக்கு குறையாமல் தண்ணீர் இருப்பு இருந்தது .
இந்த நிலையில், தமிழ்நாடு மீன்வளத்துறை மூலம் மீன் குஞ்சுகள்விடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது .
மேலும், கடந்த சில வாரங்களாக பெய்து வரும் பருவ மழை காரணமாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தற்போது, அணையின் நீர்மட்டம் 25 அடிக்கு மேல் உள்ளது .இன்னும் ஒரு சில நாட்கள் தொடர்ந்து நீர்வரத்து வரும் பட்சத்தில் இந்த அணை முழு கொள்ளளவை எட்டி இந்த ஆண்டும் மறுகால் பாயும் நிலை உள்ளது .
இந்த
நிலையில் இந்தியாவின் தண்ணீர் மனிதன் என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திர சிங் என்பவர் சாத்தியார் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த அணையில் நிரந்தரமாக தண்ணீர் தேக்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்வதற்காகவும் தொடர்ந்து இந்த அணையின் மூலம் மானாவாரிப் பயிர்விவசாயம் நடைபெற்று வருகிறது .முல்லைப் பெரியாறு வைகை கால்வாய் மூலம் சாத்தையாறு அணை இணைக்கு பட்சத்தில் இந்தப் பகுதியில் நெல். கரும்பு விவசாயம் செய்வதற்கு ஏதுவாக அமையும் என்ற காரணத்தினால், முல்லை பெரியாறு வைகை அணை இணைப்புத் திட்டத்தை சாத்தியமாக்குவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள உள்ளதாககவும்
முல்லைப் பெரியாறு, சாத்தையாறு அணை இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், நேரில் சந்திக்க உள்ளதாகவும்
ராஜேந்திர சிங் தலைமையிலான விவசாயிகள் குழுவினர் தெரிவித்தனர்.
சாத்தியார் அணை பாசன விவசாயிகள் சங்கம் சார்பாக தலைவர்
ரமேசன்செல்வராஜன், கண்ணன், பேராசிரியர் பழனி, ராமஜோதி, ஜோதிபாஸ், தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம் குருசாமி, மதுரை மாவட்ட நீர் மேலாண்மை துறை மற்றும் ஒளிரும் மதுரை அமைப்பு நிர்வாகி விஜயபாண்டியன், ஜி.பி.ரவி, செல்லூர் கண்மாய் பாதுகாப்பு குழு அபுபக்கர் ,மற்றும் பலர் இந்த ஆய்வின்போது உடனிருந்தனர்
29 அடி கொள்ளளவு கொண்ட சாத்தையாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதி 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஒருநாள் கடும் மழை பெய்தால் கூட இந்த அணை நிரம்பி வழியும் வகையில் நீர்வரத்து அமைப்பு இயற்கையாகவே அமைந்துள்ளது. இருந்த போதிலும், கடந்த சில ஆண்டுகளாக இந்த அணை நிரம்பாமல் உள்ளதற்கு காரணம் அணையின் நீர் வழி நீர் வழித்தடங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பாளர்களால் காபந்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் போது இப்பகுதி விவசாயிகள்
அணைக்கு வரும் நீர்வழித்தடங்களை சீரமைத்து நிரந்தரமாக நீர்த்தேக்க வலியுறுத்தினர். மேலும், கடும் மழைக் காலங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதும் வீணாகும் முல்லைப் பெரியாறு வைகை அணை தண்ணீரை ராட்சத பைப்புகள் மூலம் சாத்தையாறு அணை யில் தேக்கி வைத்தால் கடும் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் தருணங்களில் மதுரை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஏதுவாக இந்த அணை அமையும் என்று வல்லுநர் குழுவும் விவசாயிகளும் பலமுறை தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் கடந்த கால ஆட்சியில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தொடர் மழை காலங்களில் வீணாகும்வைகை பெரியாறுதண்ணீரை
சாத்தையாறு அணையில் தேக்கி வைக்க விவசாயிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு
ள்ளனர். இதனை செயல்படுத்தும், விதமாக இந்திய அளவில் உள்ள நீர் மேலாண்மை குழுவினரை சந்தித்து அவர்கள் மூலம் நீர் வழித் தடங்களையும் அணையை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளை மேற்கொள்வதற்கு சாத்தையாறுஅணை பாசன விவசாயிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: