முல்லை பெரியாறு பிரச்னையில், தும்பை விட் டு வாலை பிடிப்பதா?

முல்லை பெரியாறு பிரச்சனையில் தும்பைவிட்டு வாலைப்பிடிப்பதா ?

சோழவந்தான்:

சோழவந்தானில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி?
.
சோழவந்தானில், தனியார் மஹாலில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்து கொண்டு பேசும்போது:
முல்லை பெரியாறு பிரச்சனையில் தமிழக அரசு தும்பை விட்டு வாலைபிடிப்பதா என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர் . வட கிழக்கு பருவமழையால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது . கடந்த அக்டோபர் 29 – ம் தேதி அணையின் நீர்மட்டம் 138.95 அடியை எட்டியது . அப்போது கேரளா அமைச்சர்கள் முன்னிலையில் கேரளா பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடபட்டது .
முல்லைப்பெரியாறு அணையின் தண்ணீர் திறக்கும் உரிமை இதுவரை தமிழகத்திற்கு தான் இருந்தது ஏனென்றால், அணை பராமரிக்கும் உரிமை , அணை கையாளும் உரிமை தமிழகத்திற்குதான் உள்ளது .
ஆனால், தமிழக அமைச்சர்கள் , மாவட்ட ஆட்சியர் , பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் இல்லாமல் நீரை திறந்திருப்பது பெரும் சர்ச்சையாக உள்ளது .
கடந்த 29 – ம் தேதி முதல் தொடர்ந்து 6 நாட்களாக மேலாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. குறிப்பாக, கேரளாவிற்கு அணையை ஒட்டியுள்ள 8 மதகுகளிலிருந்து வினாடிக்கு 3568 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது . இதற்கு, முதலமைச்சர் எந்த விளக்கமும் அளிக்காமல், மௌனம் சாதிப்பது உள்நோக்கமா ? அல்லது அரசியலா ? என்று விவசாயிகள் கேள்வி எழுப்பி உள்ளனர் .
நீர்வளத்துறை அமைச்சர் நீண்ட நெடிய அனுபவம் உள்ளவர் நீர் இருப்பு குறித்து அவருக்கு தகவல் போய் சேரும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நீர் திறந்ததுபற்றி கண்டும் காணாமல் இருந்தது மர்மம் என்ன ? இது புரட்சித்தலைவி அம்மா, பெற்றுதந்த உரிமை என்ற காரணத்தினாலா ? விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றியது அ.இ.அ.தி.மு.க அரசு என்ற காரணத்தினாலா ? தன் சொத்தையெல்லாம் விற்று அணை கெட்டிய பென்னிக்குயிக்கிற்கு மணிமண்டபம் அமைத்து அவருக்கு அழியா புகழை உருவாக்கிய புரட்சித்தலைவி அம்மா என்ற காரணத்தினாலா ? அமைச்சர் அணையை நேரில் ஆய்வுசெய்கிறார் . ஆனால், உண்மை நிலையை மக்களுக்கு எடுத்து சொல்லவேண்டும் .
முல்லை பெரியாறு குறித்து ஏன் அரசு மௌனமாக இருக்கிறது . உண்மை நிலையை மக்களுக்கும் , விவசாயிகளுக்கும் எடுத்து சொல்ல தயங்குகிறது , பின்வாங்குகிறது என்ற கோரிக்கையை அழுத்தமாக வலியுறுத்தியும் , தமிழக உரிமையை காப்பாற்ற வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் வருகின்ற 9 – ம் தேதி தேனி , மதுரை , திண்டுக்கல் , சிவகங்கை , இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மாபெரும் கண்டண ஆர்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்கள் .
இந்த ஆர்பாட்டத்தில், பொதுமக்களும் , விவசாயிகளும் பெருமளவில் பங்கேற்கிறார்கள் .
தற்போது, கூட மீண்டும் விவசாயிகள் மத்தியில் ஒரு கோரிக்கை எழுப்பபட்டு வருகிறது , பீர்மேடு , தேவிகுளம் , ஆகிய பகுதிகளை தேனி மாவட்டத்துடன் இணைக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கூடலுார் முல்லை சாரல் விவசாய சங்கத்தினர் நவம்பர் 6 – ம் தேதி ஆர்பாட்டம் செய்ய உள்ளனர் .
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக தேக்கி கொள்ளலாம் . அணை சிற்றணை பழுது பார்க்கப்பட்டபின் 152 அடியாக தேக்கி கொள்ளலாம் என்று புரட்சித்தலைவி அம்மா, உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை பெற்றுத்தந்து தந்தார்கள் .
ஆனால், தமிழக அரசு பாராமுகத்துடன் அக்கறை இல்லாமல் இருக்கிறது விவசாயிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது .
ஆகவே ,இந்த நீர் திறப்பிற்கு உரிய விளக்கம் , முழு விசாரணை மேற்கொண்டு முல்லை பெரியாறு பிரச்சனையில் முதலமைச்சர் வெளிப்படைத்தன்மையுடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் . இந்தக் கூட்டத்தில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் சோழவந்தான் பேரூர் செயலாளர் மற்றும் மாடுகட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கூறிய கணேசன் வாடிப்பட்டி பேரூர் செயலாளர் ராஜேஷ் கண்ணா அலங்காநல்லூர் ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் ,மகளிர் அணிச் செயலாளர் லட்சுமி, மற்றும் புறநகர் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: