மது விற்பனையில், மதுரை முதலிடம்:

98.89 கோடி மது விற்பனை மதுரையே முதலிடம்

மதுரை: தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த 2 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.431 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றிருக்கிறது.

மதுவின் மீதுள்ள மோகம் குறையவில்லை. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த 2 நாட்களில் தமிழகத்தில் ரூ.431 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

இதில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.98.89 கோடிக்கும், சென்னையில் ரூ.79.84 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. சேலம் மண்டலத்தில் ரூ.87.89 கோடிக்கும், திருச்சியில் ரூ.89.95 கோடிக்கும் மது விற்பனையானது. கோவை மண்டலத்தில் ரூ.74.46 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: