புதியதாக அமைக்கப்பட்ட தெரு மின் விளக்கை ஆட்சியர் தொடங்கி வைப்பு:

புதிதாக அமைக்கப்பட்ட தெருவிளக்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
ஜெ.மேகநாதரெட்டி, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்:

காரியாபட்டி:

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், கம்பிக்குடி ஊராட்சி, மந்திரிஓடை கிராமம், நரிக்குறவர் காலணியில், நரிக்குறவர் இன மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, மாவட்ட நிர்வாகத்தின் சீரிய முயற்சியால் புதிதாக அமைக்கப்பட்ட தெருவிளக்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
ஜெ.மேகநாதரெட்டி, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.
பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
காரியாபட்டி வட்டம், கம்பிக்குடி ஊராட்சி, மந்திரிஓடை கிராமத்தில், நரிக்குறவர் காலனியில் 52 நரிக்குறவர் குடும்பங்களை சார்ந்த 200-க்கும் மேற்பட்ட நபர்கள் வசித்து வருகின்றனர்.
அவர்கள் கடந்த 2016 முதல் கட்டுக்குத்தகை கரிசல்குளம் கண்மாயில் குடியிருந்து வந்தனர். பின்னர், அவர்கள் தகுதியான நிலத்தில் பட்டா வழங்க கேட்டுக்
கொண்டதன்பேரில், அவர்களுக்கு கம்பிக்குடி ஊராட்சி, மந்திரிஓடை கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு புல எண் 138-ஐ வகைப்பாடு மாற்றம் செய்து, 54 தகுதியான நபர்களுக்கு
பட்டா வழங்கபட்டது.
இந்த பகுதியில், 24.10.2021 அன்று பெய்த மழையினால் வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது.
இது குறித்து, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்தவுடன், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரையும் தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை ஆகிய துறை மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் உதவியுடன்; மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அருகில் உள்ள மந்திரிஓடை அரசு தொடக்கப்பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்கப்பட்டது.
மேலும், நேரில் சென்று மழைநீரால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் காலனியை, பார்வையிட்டு ஆய்வு செய்து, 52 நரிக்குறவர் இன குடும்பத்திற்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட மளிகைப்பொருட்கள் மற்றும் தலையணை, பாய்கள் ஆகியவை அடங்கிய நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
அப்போது, அங்குள்ள நரிக்குறவர் வகுப்பை சார்ந்த மக்கள் தங்கள் குழந்தைகள் காரியாபட்டி வட்டம், ராஜ்நகரில் உள்ள சுரபி உண்டு, உறைவிட பள்ளியில் பயின்று வருவதாகவும், அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர வேண்டும் என்றும்; கோரிக்கை வைத்தார்கள்.
அதனடிப்படையில், காரியாபட்டி வட்டம் ராஜ்நகரில் உள்ள சுரபி உண்டு உறைவிடப்
பள்ளியில், 2021-2022 – ம் கல்வியாண்டில் மந்திர ஓடை கிராமத்தில் உள்ள நரிக்குறவர் வகுப்பை சார்ந்த 24 குழந்தைகள் மற்றும் காரியாபட்டி சுற்று வட்டாரத்தில் உள்ள நரிக்குறவர் வகுப்பை சார்ந்த 20 குழந்தைகள் என ஆக மொத்தம் 44 நரிக்குறவர் வகுப்பை சார்ந்த குழந்தைகள் கல்வி பயில்வதற்காகவும், அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து பள்ளியை தொடர்ந்து நடத்துவதற்காகவும், மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கையினை கருத்தில் கொண்டும் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியின் கீழ், ராஜ்நகரில் உள்ள சுரபி உண்டு உறைவிட பள்ளிக்கு ரூ.50,000-த்தை அந்த பள்ளியின் நிர்வாக அறங்காவலர் ஆரோக்கிய விக்டர் கேபிரியோ என்பவரிடம் வழங்கப்பட்டது.
மேலும், குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள ஓடையில் தரைப்பாலம் அமைப்பதற்கும், சாலை வசதி, மின்சார வசதி, வீடு கட்டுவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.
அதனடிப்
படையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் மதிப்பில் மந்திரி ஓடை சத்திர புளியங்குளம் சிறு பாலம் அமைப்பதற்கும், ரூ.5.75 லட்சம் மதிப்பில் சமுதாய சுகாதார வளாகம் கட்டுவதற்கும், ரூ.1.90 லட்சம் மதிப்பில் தெருவிளக்குகள் அமைப்பதற்கும் ரூ.3.84 லட்சம் மதிப்பில் குடிநீர் வசதிகள் செய்வதற்கும் ஆக மொத்தம் ரூ.46.49 லட்சம் மதிப்பீட்டில் அப்பகுதியில் உள்ள நரிக்குறவர் இன மக்கள் பயன்பெறும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அமைச்சர் பெருமக்கள் அவர்களால் 06.11.2021 அன்று பணிகள் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
அதன்படி, இன்று முதல் கட்டமாக, மாவட்ட நிர்வாகத்தின் சீரிய முயற்சியால், தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் மின்கம்பங்கள் நடப்பட்டு, மாவட்ட ஊரக வளர்ச்சி மூலம் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு இன்று பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டைகள் விரைவில் வழங்கப்படுவதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் ,அவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுப்பதற்கும், சாலை வசதிகள் ஏற்படுத்தி தருவதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்கப்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
முன்னதாக, தீபாவளி திருநாளை முன்னிட்டு, நரிக்குறவ இன மக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் இனிப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட தங்களை உரிய நேரத்தில் மழை வெள்ளத்திலிருந்து பாதுகாத்து, தங்கள் கோரிக்கைகளை ஏற்று, விரைந்து பரிசீலனை செய்து தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நரிக்குறவ இன மக்கள் தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் .இரா.மங்களராமசுப்பிரமணியன், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் .கல்யாணகுமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் .தங்க தமிழ்வாணன், காரியாபட்டி ஊராட்சி ஒன்றிக்
குழுத்
துணைத்
தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் சேகர்,காரியாபட்டி வட்டாட்சியர் த
தனக்குமார், முக்கிய பிரமுகர் கண்ணன், கம்பிகுடி ஊராட்சி மன்றத் தலைவர் லெட்சுமி பாலு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: