மேலூரில் குடிபோதையில் பாசன கால்வாயில் விழுந்து ஓட்டுனர் உயிரிழப்பு:
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் மார்க்கெட்டில் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்.
இவர் ,தனியார் வாகன ஓட்டுனராக பணியாற்றி வரும் நிலையில், நேற்று மாலை முதல் வீடு திரும்பாததால், பல்வேறு இடங்களில் தேடிவந்த நிலையில், மேலூர் பகுதியில் உள்ள பெரியார் பாசன கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, மேலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், விஜயகுமார் குடிபோதையில் பாசனக் கால்வாய் தண்ணீர் விழுந்து உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.