திருப்பரங்குன்றம் பகுதியில் அகற்றப்பட் ட கட்சிக் கொடிகள்:

திருப்பரங்குன்றம் பகுதியில், திடீரென்று அகற்றப்பட்ட கட்சி கொடிகள்:

மதுரை:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அரசியல் கட்சி கொடிமரங்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அந்தப் பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில், திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் ரவி, திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் சுந்தரி மற்றும் திருப்பரங்குன்றம் தாசில்தார் சரவணன், மாநகராட்சி உதவி பொறியாளர் சக்திவேல் ஆகியோர் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை அழைத்து கொடிக் கம்பங்களை அகற்றினர்.
பட்டப்பகலில், திடீரென்று அனைத்துக் கட்சிக் கொடி கம்பங்களும் அகற்றப்பட்ட நிலையில், அந்த கட்சி நிர்வாகிகள் கூடி இருந்ததால் இந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: