ரஜினி நலம் வேண்டி, பிரார்த்தணை:

திருப்பரங்குன்றத்தில் ரஜினி பூரண நலம் வேண்டி ரசிகர்கள் 108 தேங்காய் உடைத்து வழிபாடு:

அண்ணாத்த படம் வெற்றி பெற மண் சோறு சாப்பிட்ட ரஜினி ரசிகர்கள்:

மதுரை:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா ,ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரஜினி ரசிகர்கள் சார்பில் ரஜினி பூரண நலம் வேண்டி 108 தேங்காய் உடைத்து வழிபட்டனர். முன்னாள் காவல் கண்காணிப்பாளர் குமரவேல், மதுரை மாவட்ட ரஜினி மன்ற பொறுப்பாளர் பால தம்புராஜ், அழகர்
திருப்பரங்குன்றம் நகரச் செயலாளர் கோல்டன் சரவணன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர், இதனைத் தொடர்ந்து, வெயிலுகந்த அம்மன் கோவிலில் ரஜினியின் புதிய படமான அண்ணாத்த திரைப்படம் வெற்றிபெற ரசிகர் கோல்டன் சரவணன், முருகவேல் மண் சோறு சாப்பிட்டு வழிபட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: