தேசீய ஒற்றுமை தின உறுதிமொழி:

விவேகானந்தா கல்லூரியில், தேசீய ஒற்றுமை தின உறுதிமொழி:

மதுரை:

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளில், (அக்டோபர் 31, 2021) நமது நாட்டின் உள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மதுரை மாவட்டம், திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில், முதல்வர், மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் என்.எஸ்.எஸ். மாணவர்கள் தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்க தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். உறுதிமொழியை, முனைவர் அருள்மாறன் வாசித்தார். விவேகானந்தா கல்லூரியின் முதல்வர் முனைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் அசோக்குமார், முனைவர் ரமேஷ்குமார், இரகு, முனைவர் ராஜ்குமார், தினகரன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். ஆசிரியர்கள் முனைவர் சௌந்தர்ராஜ், மாரிமுத்து, முனைவர் ஶ்ரீதர்சுவாமிநாதன், முத்துபாண்டி, தர்மானந்தம் இணைந்து செயல்பட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: