ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய குழு க் கூட்டம்:
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சிங்கராஜ் தலைமை வகித்தார்..
கூட்டத்தில், புதிய ஒன்றியக்குழு உறுப்பினர்கள் காமராஜ், பகத்சிங், அறிமுகம்* செய்யப்பட்டது. மற்றும் அனைத்து கவுன்சிலர்களும் பல்வேறு கோரிக்கை மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய தலைவர் சிங்கராஜ் பேசியதாவது: ராஜபாளையம் ஊராட்சியில் உள்ள அடிப்படை வசதிகள் அனைத்தும் படிப் படியாக நிறைவேற்றபடும் என் உறுதி அளித்தார்.
உடன், துணை தலைவர் துரைகற்பகராஜ் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், சத்தியமூர்த்தி மற்றும் உதவி பொறியாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.