மாற்றுத் திறனாளிக்கான தீபாவளி கொண்டாட்டம்:
மதுரை:
மாற்றுத்திறனாளி களின் தீபாவளி கொண்டாட்டம் மாற்றுத்திறனாளி களுக்கான தடகள பயிற்சியாளர் தயான்சந்த் ரஞ்சித்குமார் தலைமையில் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. பாராஒலிம்பிக் வீரர்கள், இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் மாற்றுத்திறனாளி கள் சட்ட ஆலோசகருமான சாமித்துரை தேனி ஆனந்தம் மேனேஜிங் டைரக்டர் செல்வராஜன் டாக்டர் இளம்தளிர் ஆகியோர் பாரா ஒலிம்பிக் வீரர்களை பாராட்டி பரிசு வழங்கினர். விழாவில் மாற்றுத்திறனாளி சங்க நிர்வாகிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.