மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்:
மதுரை:
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில், ஏழை எளிய மக்கள் இருதய நோய் பாதிப்படைந்து சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு அதிநவீன உயிர்காக்கும் சிகிச்சை மேற்கொள்
வதற்கான கருவியை, இம் மருத்துவமனையின் இருதய இயல் துறைக்கு பவர் கிரீட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற நிறுவனத்தின் சார்பாக தனது சமூக பங்களிப்பு நிதியின் கீழ் (ரூபாய் ஐந்து கோடியே நாற்பது இலட்சம் மட்டும்) மதிப்பிலான கருவியை நன்கொடையாக வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், மதுரை மாவட்ட ஆட்சியரும்,அரசு இராஜாஜி மருத்துவமனை முதல்வர் மற்றும் பவர் கிரீட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிர்வாக இயக்குநர், கையொப்ப
மிட்டார்கள்.
இந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை முதல்வர் மரு.ஆ.ரத்தினவேல், பவர் கிரீட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிர்வாக இயக்குநர்
.எஸ்.ரவி மற்றும் அரசு இராஜாஜி மருத்துவனையின் இருதய இயல் துறைத் தலைவர் பேராசிரியர் மரு.சு.பாலசுப்பிரமணியன் மற்றும் பேராசிரியர் மரு.செல்வராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.