செல்வ விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்:

பண்ணைகுடி செல்வ விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்:

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பண்ணைகுடி கிராமத்தில், அமைந்துள்ள செல்வவிநாயகர், சுப்ரமணிய ஆலய மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
இதையொட்டி, மதுரை கல்யாண சுந்தர சிவாச்சாரியார் தலைமையில், கோயில்கள் முன்பாக யாகபூஜைகள், கடஸ்தாபனம், பூர்ணாஹூதி, நாடி சந்தானம், கலசபூஜைகள் நடைபெற்று.
கடங்கள் புறப்பட்டு, கோயிலை வலம் வந்து, கோயில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகமும், அதைத் தொடர்ந்து, மகா அபிஷேகம், தீபாராதணை, பிரசாதம் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் விழாக் கமிட்டியினரும், பாதுகாப்பு ஏற்பாடுகளை, அலங்காநல்லூர் போலீஸாரும் செய்திருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: