குளம் போல மாறிய சாலைகள்: அவதியூறும் பொதும க்கள்:

பலத்த மழையால், குளமாய் மாறிய சாலைகள்:

மதுரை:

தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், மதுரையில் பல இடங்களில் சாலைகள் குளம் போல மாறியுள்ளதாக பொதுமக்கள் பலர் குறை கூறிகின்றனர்.
மதுரை நகரில் கடந்த சில நாள்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது.
இதனால், மதுரையில், மேலமடை, வண்டியூர், யாகப்பநகர், கோமதிபுரம், ஜூப்பிலி டவுன், அம்பிகை நகர் உள்ளிட்ட பகுதிகளில், மழைநீர் செல்ல வழியில்லாமல் குளம் போல தேங்கியுள்ளன.
இதனால், பாதசாரிகளும், இரு சக்கர வாகனத்தில் செல்வோரும், பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனராம்.
மேலும், கொசுத் தொல்லையும் பெருகி வருவதாகவும் தெரிகிறது.
இது குறித்து மதுரை மாநகராட்சி அதிகாரிகள் பள்ளமான சாலைகளை சீரமைக்க வேண்டும் என, இப் பகுதி குடியிருப்போர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: