அணில் குஞ்சுகளுக்கு வண்டியில் இடம் கொடுத ்த போலீஸ் அதிகாரி:

மதுரை பைகாரா பகுதியில், இருசக்கர வாகனத்தின்னுள் பிறந்த சில நாட்களே ஆன 5 அணில் குட்டிகள் கண்டெடுக்கப்பட்டு, அணில் குட்டிகளுக்காக இருசக்கர வாகனத்தை விட்டுக்கொடுத்த பணி ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர்:

மதுரை:

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள பைக்காரா பகுதியை சேர்ந்தவர் பெரியகருப்பன்., இவர், காவல் ஆய்வாளராக பணி ஓய்வு பெற்று தனது மனைவி மற்றும் மகன்கள், பேரகுழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
கடந்த ஒரு மாதகாலமாக அவரது இருசக்கர வாகனத்தை பயன்படுத்தாமல், இருந்து வந்தார். ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் பெரியகருப்பன். இன்று மதியம் இருசக்கர வாகனத்தை வெளியே செல்வதற்காக டூவிலரை எடுக்க முற்பட்டுள்ளார். வீட்டில் நிறுத்தி வைத்திருந்த அவரது இருசக்கர வாகனத்தில் கீட்ச் கீட்ச் என்று சத்தம் வந்துள்ளது.
உடனடியாக இருசக்கர வாகனம் நிறுத்தி வைத்திருந்த இடத்தில் சில புற்கள் சிதறிக் கிடந்து உள்ளது. இருசக்கர வாகத்தில் ஏதோ ஒன்று கூடு கட்டி குஞ்சுகள் பொறித்துள்ளதை அறிந்து கொண்ட ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் பெரியகருப்பன், இருசக்கர வாகனத்தை கழற்றி பார்த்தபோது இருசக்கர வாகனத்தின் பேட்டரி இருக்கும் பகுதியில் 5 அனில் குட்டிகள் இருந்துள்ளது.
அவற்றை எடுத்துப் பார்த்துவிட்டு மீண்டும் உடனடியாக குட்டிகள் இருந்த இடத்திலேயே வைத்துவிட்டார். அணில் குட்டிகளுக்காக தனது இருசக்கர வாகனத்தை கொடுத்த பணி ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் பெரியகருப்பன் அவர்களின் இத்தகைய செயல் அனைவரும் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: