உரிமம் பெற்ற இ. சேவை மையம், கிராமங்களிலே ச ெயல்படவேண்டும்: சமூக ஆர்வலர் கோரிக்கை:

கிராமப்புறங்களில் செயல்படும் இ-சேவை மையம் கிராமப்புறங்களில் சேவை வழங்குவதற்காக என உரிமம் பெற்று, நகர்ப்புறங்களில் கல்லா கட்டுவதாக புகார்:

மதுரை:

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும், கிராமப்புற மேம்பாட்டிற்காக கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில், மத்திய, மாநில அரசின் சி. எஸ். சி. என்னும் பொது சேவை மையம் தனியார் கம்பியூட்டர் சென்டர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன் நோக்கம், அரசின் சேவைகள் கிராமப்புற மக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்ப்பது.
இதைக் கண்கணிக்க, மாவட்ட மேலாளர் மற்றும் துணை மேலாளார் உள்ளனர்.
இதை மக்களுக்கு சிறப்பாக சேவை செய்யும் தனியார் சி எஸ் சி தனியார் கம்பியூட்டர் சென்டர்களுக்கு மாநில அரசின் இ-சேவை ஐ டி வழங்கப்படுகிறது. அவர்கள், அதே கிராமத்தில் தொடர்ந்து இ-சேவை மையத்தின் மூலமாக வருமான சான்று, இருப்பிடச்சான்று, ஜாதிச்சான்று (வகுப்பு சான்று) போன்ற ஒவ்வொரு சான்றுக்கு ரூபாய் 60 வீதம் மக்களிடம் கட்டணம் பெற்று சான்றிதழ் வழங்க வேண்டும்.
ஆனால், இவர்கள் இந்த இ-சேவை ஐ டி கிடைக்க பெற்றதும், அரசின் விதிமுறைகளை மீறி,
நகர் புறங்களில் கடையை நடத்தி வருகிறார்கள். இதில், பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவை வழங்குவதற்கு அரசு அதிகாரிகளை கைக்குள் வைத்துக்கொண்டு கல்லா கட்டுவதாக புகாரும் எழுந்துள்ளது.
மேலே, குறிப்பிட்ட சேவைகளுக்கு ருபாய் 120,150 என வசூல் செய்கிறார்களாம். உரிமம் பெற்ற பகுதிகள்தான் இவர்கள், இ சேவை மையம் நடத்துகிறார்களா என, மாவட்ட ஆட்சியர் சற்று கவனத்தில் கொண்டு அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட கிராமப்புறத்தில் தொடர்ந்து இயக்கவும், கண்காணிக்கவும் மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிட வேண்டும் என, சமூக ஆர்வலரின் கோரிக்கையாக உள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: