மீன் வளர்பில் ஆர்வம் காட்ட, மாவட்ட ஆட்சி யர் வேண்டுகோள்:

சிவகங்கை மாவட்டம்
மானியத்திட்டத்தில் பண்ணைக்குட்டைகள் அமைத்து வேளாண் பயன்பாட்டுடன் இணைத்தொழிலாக மீன் வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.மதுசூதன் ரெட்டி, வேண்டுகோள்:

மதுரை:

சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியம், கீழப்பட்டமங்கலம் கிராமத்தில் வேளாண் பொறியியல் துறையின் மூலம் மானியத் திட்டத்தில் முன்னோடி விவசாயி
குமார் பண்ணைக்குட்டைகள் அமைத்து மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் செய்தியாளர்கள் பயணம் மேற்கொள்ள
ப்பட்டது. இந் நிகழ்ச்சியில், செய்தியாளர்கள் முன்னிலையில், பண்ணைக்
குட்டைகள் அமைத்து மீன் வளர்ப்பு மூலம் பயன் குறித்து பார்வையிட்டு விவசாயிடம் கேட்டறிந்ததுடன், மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், வேளாண்
மைத்துறையுடன் ஒருங்கிணைந்த துறைகளான வேளாண் பொறியியல் துறை மற்றும் தோட்டக்கலைத்துறையின் மூலம் விவசாயிகளின் தேவைக்கேற்ப திட்டங்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருவதுடன், விவசாயிகளுக்கு வேளாண் பணியுடன் இணைத்தொழில் மூலம் நிரந்தர வருமானம் பெற்று பயன்பெறும் வகையில், வேளாண் பொறியியல்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையின் மூலம் மானியத்திட்டத்தல் பண்ணைக்குட்டைகள் அமைத்து பெறப்படுகின்றன.
அந்தவகையில் தற்போது, வேளாண் பொறியியல் துறையின் மூலம் 100 சதவிகிதம் மானியத்திட்டத்தில் பண்ணைக்குட்டைகள் அமைத்துக் கொடுக்கப்
படுகின்றன. ஒவ்வொரு பண்ணைக்குட்டையும் தலா ரூ.1,00,000 மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முழுமானியத்
திட்டத்தில், விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதன் நோக்கம், விவசாயிகள் விவசாயப்பணி காலத்தில் தொய்வின்றி பணிகளை மேற்கொள்ளவும் மற்றும் அதன்மூலம் இணைத்தொழிலாக மீன் வளர்த்தல் மற்று தீவனப்புல் வளர்த்தல், அசோலா தீவனம் வளர்த்தல் போன்ற திட்டத்தின் மூலம் விவசாயிகள் நிரந்தர வருவாய் ஈட்டும் வகையில் இத்திட்டம் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது.
தற்போது, பண்ணைக்குட்டைகள் மூலம் முன்னோடி விவசாயி மீன் வளர்ப்புத்துறையின் மூலம் முழுமானியத்திட்டத்தில் மீன்குஞ்சுகள் பெறப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறார். தற்பொழுது, நாள் ஒன்றுக்கு 50 கிலோ முதல் 70 கிலோ வரை மீன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் நிரந்தர வருவாய் கிடைக்கும் வகையில் நாள் ஒன்றுக்கு ரூ.3,500 மேல் கிடைக்கும் வகையில் விவசாயி பயன்பெற்று வருகிறார்.
மேலும், இப்பண்ணைக்குட்டைகள் மூலம் அசோலா தீவனம் வளர்த்து கறவைமாடுகளுக்கு வழங்கப்பட்டு வருவதன் மூலம் நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் பால் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற திட்டங்களை மாவட்டத்திலுள்ள விவசாயிகள் பயன்படுத்தினால் நிலையான வருமானம் பெறுவதற்கு உதவியாக இருக்கும். வேளாண் பொறியியல்துறையைப் பொறுத்தவரை கடந்த ஆண்டிற்கு 100 பண்ணைக்குட்டைகள் முழுமானியத்தில் அமைத்துத்தரப்பட்டுள்ளது. தோட்டக்கலைத்துறையின் மூலம் பசுமைக்குடில் அமைத்து விவசாயப்பணிகள் மேற்கொள்வது குறித்து 75 சதவிகிதம் மானிமும், மரக்கன்றுகள் பராமரிப்பது குறித்து 55 சதவிகிதம் மானியத்திலும் பண்ணைக்குட்டைகள் அமைத்துத்தரும் வகையில் கடந்தாண்டு விண்ணப்பித்த 48 விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
தற்பொழுது, நடப்பாண்டில் வேளாண் பொறியியல்துறையின் மூலம் 55 விவசாயிகள் விண்ணப்பித்து முழுமானியத்திட்டத்தில் பண்ணைக்குட்டைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத்துறையின் மூலம் இதுவரை விண்ணப்பித்த 25 விவசாயிகளுக்கும் மானியத்திட்டத்தில் பண்ணைக்
குட்டைகள் அமைத்துக் கொடுக்கப்
பட்டுள்ளன.
இத்தகைய திட்டத்தை 100 சதவிகிதம் விவசாயிகள் அமைத்து பயன்படுத்தும் பொழுது மீன் வளர்ப்புத்துறையின் மூலம் முழுமானியத்தில் மீன் குஞ்சுகள் வழங்கப்படுகிறது. கால்நடைப்பராமரிப்புத்துறையின் மூலம் மானியத்தில் ஆடுகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்ந்திட அரசு பல்வேறு திட்டங்களை மானியத்துடன் வழங்கி வருகிறது. எனவே, விவசாயிகள் எந்தஅளவிற்கு விவசாயப்பணியில் கவனம் செலுத்துகிறீர்களோ அந்தஅளவிற்கு இணைத்தொழிலில் கவனம் செலுத்தும் போது ஆண்டு முழுவதும் நிலையான வருமானம் பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.
இச்செய்தியாளர் பயணத்தின் போது, வேளாண்மைத்துறை இணை இயக்குநர்
வெங்கடேஸ்வரன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர்
விஜயகுமார், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்
அழகுமலை, வேளாண்மைத்துறை துணை இயக்குநர்கள்
பன்னீர்செல்வம்,
கதிரேசன், வேளாண் பொறியியல்
துறை உதவிப்
பொறியாளர்கள்
ஜெகநாதன்,
சுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: