போலீஸ் சார்பில் வீரவணக்க நாள்:

மதுரை மாவட்டம்
காவலர் வீரவணக்க நாள்:

மதுரை:

1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில், மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி ‘காவலர் வீரவணக்க நாள்’ அனுசரிக்
கப்படுகிறது
மதுரை மாவட்டம் மதுரை மாநகர ஆயுதப்படை வளாகத்தில்,(இன்று) 21-10-2021 ம் தேதியன்று, காவலர் வீர வணக்க நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில், தென் மண்டல காவல்துறைத் தலைவர் .டி.எஸ். அன்பு, ., மதுரை மாநகர காவல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்கா ., மதுரை சரக காவல் துறை துணைத் தலைவர்
என்.காமினி ., மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .வி. பாஸ்கரன் மற்றும் காவல் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை மலர் வளையம் வைத்து, 54 குண்டுகள் முழங்க, இன்னுயிர் நீர்த்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: