சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்.

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்:

மதுரை:

மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழு சார்பில், வாடிப்பட்டி வட்ட சட்டப்பணிகள் குழு, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார்.
செயலர் சுவாமி வேதானந்த மற்றும் குலபதி சுவாமி அத்யாத்மனந்த ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மதுரை மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக் குழு செயலர் மற்றும் நீதிபதி தீபா, வாடிப்பட்டி வட்ட உரிமையியல் நீதிபதி ராமகணேஷ், மதுரை மாவட்ட நீதிமன்ற அதர்வர் கண்ணன், சிறப்பு சட்ட உதவி குழு வக்கீல் த உமாசங்கர், மதுரை உயர்நீதிமன்ற மூத்த குழு ஆலோசகர் ராஜாராமன், வாடிப்பட்டி வக்கீல் .
தியாகராஜன் மற்றும் வாடிப்பட்டி வக்கீல் சுபிதா ஆகியோர் பல்வேறு சட்டங்கள் பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சியினை, கல்லூரி பேராசிரியர் முனைவர் சந்திரசேகரன் ஒருங்கிணைத்தார். கல்லூரியின் அகற்ற மதிப்பீட்டு குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு சதீஷ்பாபு நன்றி உரை ஆற்றினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: