மீனாட்சி மிஷன் மருத்துவமனையில், எலும்பு ரை நோய் விழிப்புணர்வு: கருத்தரங்கம்:

மீனாட்சி மிஷன் மருத்துவமனையில்
எலும்புப்புரை நோய் விழிப்புணர்வு
நிகழ்ச்சி.

ஒரு நாளுக்கு 1,000 முதல் 1,300 மிகி வரை கால்சியம் உட்கொள்ள வேண்டும் என்ற FAO / WHO பரிந்துரைக்குப் பதிலாக ஒரு நாளுக்கு 500 மிகி க்கும் குறைவாகவே கால்சியம் உட்கொள்வதால் எலும்பு நிறை அளவு குறைபாட்டினால் இந்தியர்கள் அவதியுறுகின்றனர் . இதனால் முதுமை காலத்தில் எலும்புப்புரை நோயால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளவர்களாக இந்தியர்கள் இருக்கின்றனர் . இந்திய மக்களில் அனைத்து வயதினர் மத்தியிலும் , ஆண் , பெண் , இரு பாலர் மத்தியிலும் வைட்டமின் D குறைபாடும் , போதுமான அளவு வைட்டமின் D இல்லாத நிலையும் காணப்படுகிறது . உலக எலும்புப்புரை நோய் தினத்தன்று மதுரை மீனாட்சி மிஷன் இதன் மருத்துவர்கள் மீதான விழிப்புணர்வை மருத்துவமனையைச் சேர்ந்த அதிகரிப்பதற்கான நோக்கத்தோடு இத்தகவலை தெரிவித்தனர் . மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மூட்டு மற்றும் விளையாட்டு மருத்துவ சிகிச்சை பிரிவின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் யுடி மருத்துவர் வாசன் இதுபற்றி கூறியதாவது : " எலும்புப்புரை ( எலும்பு மெலிதல் ) நோயின் காரணமாக இந்நாட்டில் எலும்பு முறிவுகள் , குறிப்பாக முதுகுத்தண்டு முறிவுகள் மற்றும் தொடை எலும்பின் வளைந்த மேல்தண்டு பகுதியில் ஏற்படும் முறிவுகள் படிப்படியாக அதிகரித்து வருகிறது . இத்தகைய எலும்பு முறிவுகளுக்கு சிகிச்சையளிப்பதில் ஏற்படும் செலவானது மிக அதிகமாக இருப்பதால் , இவை ஏற்படுவதை குறைப்பதற்கு அதிக முயற்சிகள் எடுக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது . இதை ஒரு பொது சுகாதார சவாலாகக் கருதி செயல்பட வேண்டும் . இந்தியாவில் முதியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் இனிவரும் ஆண்டில் எலும்புப்புரையால் ஏற்படும் எலும்பு முறிவுகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கும் . எலும்புப்புரை நோய்க்கான அதிகரித்த இடர்வாய்ப்பில் இந்திய பெண்களை வைக்கிற ஊட்டச்சத்து காரணிகள் பற்றி அவர் பேசுகையில் , ‘ யுனிசெஃப் அமைப்பின் படி இனப்பெருக்கத்திறன் வயதுள்ள இந்திய பெண்களில் 25 % -த்தினருக்கு ஊட்டச்சத்து குறைவாக இருக்கிறது . அவர்கள் உட்கொள்ளும் கால்சியம் குறைவாக இருப்பதோடு வைட்டமின் D அளவுகளும் குறைந்தே குறைவதற்கு இது காணப்படுவதால் எலும்பு நிறை அளவு வழிவகுக்கிறது . இதனால் , இந்தியாவில் பெண்கள் குறைபாடுடனேதான் வாழ்க்கையைத் தொடங்க வேண்டியிருக்கிறது . உணவு பழக்கங்களைப் பொறுத்தவரை ஒரே வீட்டிலேயே இருக்கும் ஆண்களுக்கும் , பெண்களுக்குமிடையே கணிசமான வேறுபாடும் இருக்கிறது . பெண்கள் கடைசியாகவே , அதுவும் மிகக் குறைவாகவே உணவு உண்கின்றனர் . இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து பெண்களது வயது முதிர முதிர , எலும்புப்புரை நோய்க்கான அதிகரித்த இடரில் அவர்களை நிறுத்துகிறது , " என்று கூறினார் .

இதில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மூக்கு மற்றும் விளையாட்டுத்துறை சிகிச்சை பிரிவு சிறப்பு நிபுணர் டாக்டர் பிரபு வைரவன் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் ஆர் வெற்றிவேல் நல்லதம்பி மூட்டு மற்றும் விளையாட்டு மருத்துவ சிகிச்சைப் பிரிவின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் மருத்துவர் யூ டி வாசன் உள்ளிட்ட மருத்துவர்கள் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: