தீர்த்தவாரி உற்சவ விழா:

திருப்பாலை கிருஷ்ணன் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம்:

மதுரை:

மதுரை திருப்பாலை கிருஷ்ணன் கோயிலில் மண்டலபூஜையை யொட்டி, பெருமாள், தாயருக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
இக் கோயிலில், கும்பாபிஷேகத்தையொட்டி, மண்டலபூஜையானது நடந்து வருகிறது.
விழாவையொட்டி, திருக்குளத்தில் பெருமாள், தாயார் தீர்த்தமாடுவது வழக்கம்.
கொரோனா தடை காலம் என்பதால், கோயில் வளாகத்தில் உள்ள தீர்த்த தொட்டியில், தீர்த்தவாரி உற்சவம் கிருஷ்ணனுக்கும், தாயாருக்கும் நடைபெற்றது.
இதை பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் விழாக் கமிட்டியினர், நிர்வாகிகள் செய்திருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: