தின்பண்டம் உற்பத்தி நிலையத்தில் திடீர் த ீ விபத்து:

தின்பண்டம் உற்பத்தி நிலையத்தில் திடீர் தீ விபத்து:

மதுரை:

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெரு 13-வது குறுக்கு தெருவில் பாக்யராஜ் என்பவர் மிச்சர் உள்ளிட்ட பலகாரங்கள் செய்யும். உற்பத்தி செய்து கடைகளுக்கு விநியோகம் செய்யும் தொழில் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை நான்கு முப்பது மணி அளவில் மிக்சர் மற்றும் பலகாரம் பொருட்கள் தயாரிக்கும் குடோனில் புகை வருவதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். அப்பொழுது ,அருகே சென்று பார்த்தபோது தீ மளமளவென எரிந்து கொண்டு இருந்தது உடனடியாக அப்பகுதி மக்கள் மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கவே,
சம்பவ இடத்திற்கு இரண்டு வாகனங்களில் சென்ற நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்து குறித்து, அறிந்த மதுரை மாவட்ட உதவி அலுவலர் இது குறித்து விசாரணை மேற்கொண்டார். மேலும்,
தீ விபத்து சம்பவம் குறித்து, மதுரை ஜெயந்திபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: